grape_fruit_002-615x369.jpg Read more

பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவதற்கான 10 காரணங்கள்!

புளிப்பு, இனிப்பு சுவை கொண்ட பம்பளிமாஸ் பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. 1. ஈரல் பாதிப்புகளால்தான் காமாலை நோய் உருவாகின்றது. இந்த காமாலை நோயின் தாக்கம் குறைய பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவது நல்லது. 2. பித்தப்பை கற்களை கரைத்து, கல்லீரலை தூண்டசெய்கிறது. 3. இந்த பழத்தில் உள்ள லைகோபீன் என்னும் நிறமி புற்றுநோய் செல்களை மற்றும் கட்டிகளை அழிக்கும் திறன் கொண்டது. 4. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கிறது. 5. சாப்பாட்டிற்கு முன் இதனை […]

face_tips_005-615x349.jpg Read more

சருமம் பாதிப்படைவது எதனால்?

உங்களுடைய சருமம் சீராக இல்லையெனில் என்ன பிரச்சனைகள் என்பதை கவனியுங்கள். நீர்ச்சத்து, ஊட்டச்சத்துள்ள உணவு எடுத்துக்கொள்வது சருமத்துக்கு பொலிவைத் தந்தாலும், சருமத்தை பாதிக்கும் விடயங்கள் சில உள்ளன. அலர்ஜி பருக்கள், கருவளையம், எண்ணெய் வழிதல், வறண்ட சருமம் போன்ற அலர்ஜிகள் இருப்பின் அவற்றை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு பருவகாலநிலை மாற்றம்கூட அலர்ஜியை ஏற்படுத்தலாம். பூக்களின் மகரந்தம், தூசு, பறவைகளின் சிறகுகள் போன்றவற்றால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும். இதனால் கண்கள் சிவப்பாகுதல், நீர் […]

papaya_juice_002-615x408.jpg Read more

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ்..நன்மைகளோ ஏராளம்

பப்பாளியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் இதனை தினமும் உட்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. * பப்பாளியில் ஏராளமான நார்ச்சத்து இருப்பதால் குடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றுகிறது, அத்துடன் குடல் புற்றுநோய் வராமலும் பாதுகாக்கிறது. * அதுமட்டுமின்றி செரிமானத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வாகிறது. * உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறந்த பழமாகும், மேலும் ரத்த நாளங்களுக்கு சத்துக்களை வழங்குகிறது. * தினமும் குடித்து வருவதன் மூலம் நுரையீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சுவாச பிரச்னைகளால் […]

heart_egg_002-615x464.jpg Read more

முட்டை சாப்பிட்டால் மாரடைப்பு வராது! புதிய ஆய்வில் தகவல்

கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கும், திடீரென ஏற்படும் மாரடைப்புக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லை என புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இதய நோய் பாதிப்புக்கான காரணிகள் குறித்து கடந்த 1984ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை கிழக்கு பின்லாந்து பல்கலைகழகம் ஆய்வு மேற்கொண்டது. இதில் இதயநோய் பாதிப்பில்லாத 42 வயது முதல் 60 வயது நிரம்பிய 1,032 ஆண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு தினசரி கொழுப்பு நிறைந்த உணவுகளும், முட்டையும் வழங்கப்பட்டது. 21 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் […]

sipachi_001-615x431.jpg Read more

எந்த கீரையில் சத்து அதிகம்!

உணவு பதார்த்தங்களில் மிகுந்த சத்துக்கள் நிறைந்தது என்றால் அது கீரை தான். எண்ணற்ற பலன்கள் கீரையில் அடங்கியுள்ளன. கீரைவகைகளில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. கீரைகளை குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே கொடுத்து வருவது அவர்களை ஆரோக்கியமாக வைக்கும். சரி எந்தெந்த கீரையில் என்னென்ன சத்துகள் உள்ளன என்பது தெரியுமா? முருங்கை கீரை: முருங்கை மரத்தின் பூக்கள், காய், கீரைகள் என அனைத்துமே மனிதர்களுக்கு பயனளிக்கக்கூடியது. பாலில் உள்ளதை விட நான்கு மடங்கு இரும்பு சத்து முருங்கை கீரையில் […]

12717831_489784484540891_2624481807919658132_n-615x458.jpg Read more

மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி

விடியறதுக்கு முன்பே, விசுக்கென விழிப்பு வந்துவிட்டது வாசம்பாவுக்கு. அரைகுறைத் தூக்கத்துடன் எழுந்து கண்ணாடியைப் பார்த்தவள், ‘என்ன இது… முகம், கை எல்லாம் மஞ்சளா இருக்கு…’ எனப் பதறினாள். ‘காமாலைக் கண்ணுக்கு, கண்டதெல்லாம் மஞ்சள்’னு அம்மணி சொன்னது ஞாபகத்துக்கு வர, அலறியடித்து அம்மணியிடம் ஓடினாள். ‘இங்க பாரேன் அம்மணி, என் முகமெல்லாம் மஞ்சளாத் தெரியுது. காமாலை கீமாலை வந்திருக்குமோனு பயமாயிருக்குடி…’ என வந்து நின்றவளை, பக்கம் வந்து பார்த்தாள் அம்மணி. ‘உன் கண்ணு மஞ்சளாத் தெரிஞ்சா, காமாலைனு சந்தேகப்படலாம். […]

12745751_489784661207540_1210209355517322926_n-615x819.jpg Read more

ஒரு துண்டு ஆப்பிள்

காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலைவலி குறையும்.

12669422_510696872435165_5883752526439542277_n-615x766.jpg Read more

மூட்டு வலிக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

முதிர்ந்த வயதை நெருங்கும்போது, மூட்டு வலிதான் முதலில் எட்டிப்பார்க்கும். மூட்டுகள் சிதைவதால் மூட்டு வலி உண்டாகிறது; மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் வரும். பெரும்பாலும் 55 வயதைத் தாண்டியப் பெண்களிடம் காணப்படும் இந்த வலிக்குக் காரணம், முதுமையை அடையும்போது, எலும்புகளின் முனைகளை மூடியுள்ள குருத்தெலும்புகள் தேய்ந்து முற்றிலும் அரிக்கப்படும். இந்த நிலையில் எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்வதால் ஏற்படும் பிரச்னையே. முக்கிய காரணங்கள்: பரம்பரை, அதிக உடல் எடை, அதிக நேரம் சம்மணமிட்டு உட்கார்ந்து இருத்தல், சத்தான […]

10395858_705755772871777_5589601578859019887_n.jpg Read more

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்:

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 2.மிக அதிகமாகச் சாப்பிடுவது இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல் மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல் நிறைய சர்க்கரை சாப்பிடுவது, […]

12741857_489481774571162_6249580880778547222_n-615x428.jpg Read more

இருமலுக்கு கைகண்ட மருந்து சிற்றரத்தை

வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் மூலிகைகளில் சிற்றரத்தையும் ஒன்று. இதனை அலோபதி மருந்துகளாக மாற்றி நமது நாட்டிற்கு திருப்பி அனுப்புகின்றனர். சிற்றரத்தை கோழையை அகற்றுவதில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. வெப்பம் இதன் இயல்பு நிலையாகும். நாள்பட்ட வறட்டு இருமலுக்கு இது கை கண்ட மருந்தாகும். இருமலுக்கு சிற்றரத்தையை மிகவும் எளிய முறையில் பயன்படுத்தலாம். சிறிய துண்டு சிற்றரத்தை வாயிலிட்டு மெதுவாக சுவைத்தோமானால் ஒருவித காரம் தந்து விறுவிறுப்பும் தோன்றும். அந்த உமிழ்நீரை மெதுவாக தொண்டைக்குள் இறக்கிக் கொண்டு இருந்தோமானால் வறட்சியுடன் […]