உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி; 6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை

by Admin / 24-11-2018 / 0 comments
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி; 6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை படைத்துள்ளார்.

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி; 6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை

புதுடெல்லியில் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் 48 கிலோ எடை பிரிவிற்கான இறுதி போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை (48 கிலோ) எதிர்கொண்டார். இந்த போட்டியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் ஒகோட்டோவை வீழ்த்தி மேரி கோம் 6வது முறையாக தங்க பதக்கத்தினை வென்றுள்ளார். இந்தியாவின் மணிப்பூரை சேர்ந்த 35 வயது நிறைந்த மேரி கோம் 3 குழந்தைகளுக்கு தாயானவர். அவர் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை 5 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்றுள்ளார். தனது முதல் தங்க பதக்கத்தினை 16 வருடங்களுக்கு முன் வென்றார். இறுதியாக 2010ம் ஆண்டில் 48 கிலோ எடை பிரிவில் அவர் தங்கம் வென்றார். உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் அயர்லாந்து நாட்டு வீராங்கனை கேட்டி டெய்லருக்கு இணையாக பதக்கங்களை குவித்திருந்த மேரி கோம் இந்த போட்டியில் பெற்ற வெற்றியால் அதிக பதக்கங்களை குவித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.