செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்  ஆக்சிஜன் பற்றாக்குறையினால் 13 பேர் சாவு 

by Editor / 05-05-2021 03:50:31pm
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்  ஆக்சிஜன் பற்றாக்குறையினால் 13 பேர் சாவு 



செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் 13 பேர் சாவு 
உயிரிழந்தனர் என்று கூற முடியாது என அம்மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 1500க்கு மேல் சென்று கொண்டிருக்கிறது. அங்குள்ள அரசு மருத்துவமனையில் 500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் 
மே 4) 10 மணி முதல் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அடுத்தடுத்து 13 பேர் உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டது என இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
 இதுகுறித்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் கூறுகையில்,” தனிப்பட்ட முறையில் மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை குறித்து கவனித்து வருகிறேன். ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 13 பேர் உயிரிழக்கவில்லை. ஆக்சிஜன் விநியோகத்தில் இருந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. 
உயிரிழந்த 13 நோயாளிகளில் ஒருவர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். மற்றவர்கள் அறிகுறிகளுடன் சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 12 நோயாளிகள் இணை நோய்கள், வயது மூப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக உயிரிழந்திருக்கலாம். இருப்பினும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில்,தவறு இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
செங்கல்பட்டில் கொரோனா முதல் அலையை விட 2ம் அலையில் பாதிப்பு 5 மடங்கு அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் தேவையான அளவு ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. மேலும் ஆக்சிஜன் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளது. அதேசமயம், நோயாளிகள் அனைவருக்கும் ஒரே அளவில் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்படக் கூடாது. தொற்று பாதிப்பு தீவிரத்துக்கு ஏற்ப சரியான முறையில் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட வேண்டும். இது சரியாக செய்யப்படவில்லையென்றாலும், சிக்கல் ஏற்படும். ஆக்சிஜன் மேலாண்மை முக்கியம். இதுகுறித்து மருத்துவமனை டீனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via