தி.மு.க அமைச்சரவையில் யாருக்கெல்லாம் இடம்?

by Editor / 05-05-2021 07:06:52pm
தி.மு.க அமைச்சரவையில் யாருக்கெல்லாம் இடம்?

 


தமிழக ஆளுநர் மாளிகையில் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார். அவரது அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் யார்?' என்ற முழு விவரம்  தெரியவில்லை 
 இந்நிலையில், தி.மு.க அமைச்சரவையில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும் என்பது தொடர்பாக தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது.
அமைச்சரவையில் புதியவர்களுக்கான வரிசையில் மா.சுப்ரமணியன், டி.ஆர்.பி.ராஜா, பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், அன்பில் மகேஷ், பி.டி,ஆர்.பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ், ஆவடி நாசர், சேகர்பாபு ஆகியோர் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. சீனியர்களில் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரியகருப்பன், தமிழரசி, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு, வெள்ளக்கோவில் சாமிநாதன், முத்துச்சாமி, செந்தில் பாலாஜி, இளித்துறை ராமச்சந்திரன் ஆகியோர் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, 50:50 என்ற விகிதத்தில் அமைச்சரவை அமைய வேண்டும் எனத் தி.மு.க தலைமை நினைக்கிறது.
அதிகாரிகள் - உத்தேசப் பட்டியல்
தலைமைச்செயலாளர் - இறையன்பு
முதல்வரின் தனிச்செயலர் - உதயச்சந்திரன்
முதல்வரின் தனிச்செயலர் - உமாநாத்
முதல்வரின் தனிச்செயலர் - எஸ்.எஸ். சண்முகம்
அம்பாசமுத்திரத்தில் ஆவுடையப்பன் தோற்றுவிட்டதால், இந்தமுறை ஒட்டன்சத்திரம் அர.சக்ரபாணிக்கு சபாநாயகர் பதவி கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. துரைமுருகனுக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கப்படுமா என்பதும் சந்தேகம்தான். மேலும், சேப்பாக்கத்தில் வென்ற உதயநிதியின் பெயர் தற்போது வரையில் அமைச்சரவை பட்டியலில் இல்லை எனவும் சொல்லப்படுகிறது. 

 

Tags :

Share via