மாநில ஜூனியர் கைப்பந்து போட்டி சேலத்தில் நடக்கிறது

by Admin / 24-11-2018
மாநில ஜூனியர் கைப்பந்து போட்டி சேலத்தில் நடக்கிறது

சேலம் மாவட்ட கைப்பந்து சங்கம் மற்றும் சேலம் காலேஜ் ஆப் என்ஜினீயரிங் சார்பில் தமிழ்நாடு கைப்பந்து சங்கம் அனுமதியுடன் 44–வது மாநில ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சேலம் மேட்டுப்பட்டியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 7–ந் தேதி முதல் 10–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 1–1–2001–க்கு பிறகு பிறந்த வீரர்–வீராங்கனைகள் பங்கேற்க தகுதி படைத்தவர்கள் என்று தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Share via