கொரோனா தடுப்பு:  ஆட்சியர்களுடன்  முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை

by Editor / 30-06-2021 06:17:44pm
 கொரோனா தடுப்பு:  ஆட்சியர்களுடன்  முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை

 


தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தின் புதிய  முதலமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து முக ஸ்டாலின் சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டார். இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் காணொலி காட்சி மூலம்  ஆலோசனை நடத்தினார் .
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இறையன்பு ஐ.ஏ.எஸ்., மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், காவல்துறை, சுகாதாரத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், கொரோனா நோயாளிகளுக்காக, ஆக்சிஜனுடன் கூடிய 500 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நேரில் சென்ற மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via