எதிர்க்கட்சி தலைவர் விவகாரம்  அதிமுக கூட்டத்தில் வாக்குவாதம் 

by Editor / 07-05-2021 06:45:21pm
 எதிர்க்கட்சி தலைவர் விவகாரம்  அதிமுக கூட்டத்தில் வாக்குவாதம் 


 

அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இந்த மீட்டிங்கிற்கு தலைமை வகிக்கிறார்கள். 66 அதிமுக எம்எல்ஏக்களில் 63 பேர் மீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர்.  எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் அதிமுக எம்எல்ஏக்கள் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிகின்றன. இதில் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், ஓபிஎஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் என்று விடாப்பிடியாக கூறியுள்ளனர். ஜெயலலிதா இரண்டு தரப்புக்கும் பாதிக்கு பாதி ஆதரவு இருந்ததால் வாக்குவாதம் பெரிதாகி உள்ளது. இபிஎஸ் முதல்வராக இருந்துவிட்டார்.. அவருக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஓபிஎஸ் அமைதியாக இருந்தார். இப்போது எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கும் இபிஎஸ் ஆசைப்பட கூடாது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற ரீதியில் ஓபிஎஸ்தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்க வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் பேசி உள்ளனர். ஆதரவு எம்எல்ஏக்கள் அதோடு தனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டும் என்று ஓபிஎஸ்ஸும் உறுதியாக மீட்டிங்கில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது;.
இதையடுத்து பேசிய ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர், வன்னியர் இடஒதுக்கீடு போன்ற இபிஎஸ் செய்த தவறான முடிவுதான் தெற்கில் நாம் தோல்வி அடைய காரணம். அதனால் அவரை எதிர்க்கட்சி தலைவராக ஏற்க முடியாது என்று கூறியுள்ளனர். இதில் இன்னும் எந்த  முடிவும் எடுக்கப்படவில்லை.

 

Tags :

Share via