பூமியில் விழும் சீன ராக்கெட்டின் பாகம் : ஆபத்து ஏற்படுமா என விஞ்ஞானிகள் ஆய்வு 

by Editor / 07-05-2021 08:33:21pm
பூமியில் விழும் சீன ராக்கெட்டின் பாகம் : ஆபத்து ஏற்படுமா என விஞ்ஞானிகள் ஆய்வு 



சீனா ஏவிய ராக்கெட்டின் மிகப்பெரிய பாகம் ஒன்று பூமியின் மீது விழப் போகிறது. இதனால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்
18 டன் எடை கொண்ட இந்தப் பாகம் கடந்த பல தசாப்தங்களில் பூமி மீது கட்டுப்பாடில்லாமல் விழும் மிகப்பெரிய பொருளாகும்.
தனது விண்வெளி நிலையக் கட்டமைப்புக்காக கடந்த மாதத்தில் சீனா லாங் மார்ச் - 5பி என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இதன் பணி நிறைவடைந்துவிட்டாலும், இந்த ராக்கெட்டின் பாகம் இப்போது கட்டுப்பாடு இல்லாமல் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பாகம் பூமியை நோக்கி வரும் பாதையை உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பதாகவும் இப்போதைக்கு அதைச் சுட்டுத் தள்ளும் எந்தத் திட்டமும் இல்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
"யாருக்கும் ஆபத்தில்லாத பகுதியில் ராக்கெட்டின் பாகம் விழும் என நம்புகிறோம். கடலிலோ அல்லது அதைப் போன்ற வேறு இடத்திலோ விழக்கூடும்" என்று அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்தார்.
கிரீன்விச் நேரப்படி சனிக்கிழமை இரவிலோ ஞாயிற்றுக்கிழமை காலையிலோ ராக்கெட் பாகம் பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழையும் என பல நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். ஆயினும் இந்தக் கணிப்புகள் அனைத்தும் உறுதியானவை அல்ல என கூறப்படுகிறது.

 

Tags :

Share via