மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம்!

by Staff / 24-11-2018
மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம்!

வாஷிங்டன் : முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற இந்த நிறுவனத்தின் மாநாட்டில் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம்!

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில்செயல்பட கூடிய இந்த ஸ்மார்ட்போன், கேலக்சி எஃப் ஸ்க்ரீன் திறந்த நிலையில் 7.3 அங்குள்ள டிஸ்பிளேவில் டேப்லெட் போன்று பயன்படுத்தக் கூடியதாகவும் மடங்கிய நிலையில் 4.58 அங்குள்ள டிஸ்பிளேவுடன் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓஎல்இடி பேனல் வசதியுடன் உருவாக்கப்பட்ட இந்த போனை ஸ்மார்ட்போனாகவும் டேப்லெட் ஆகவும் பயன்ப்படுத்தலாம். இரண்டு சிம் கார்டு வசதி 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி என்று சமீபத்திய தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த செல்போன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடைய விலை சுமார் 1லட்சத்து 10 ஆயிரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.