நோயாளிகளை அனுமதிக்க கொரோனா  பாசிட்டிவ் சான்று  வேண்டாம்   மத்திய அரசு அறிவிப்பு

by Editor / 30-06-2021 05:16:24pm
நோயாளிகளை அனுமதிக்க கொரோனா  பாசிட்டிவ் சான்று  வேண்டாம்   மத்திய அரசு அறிவிப்பு

 

நோயாளிகளை அனுமதிக்க கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ்என  மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அதி தீவிரமாக இருக்கிறது. தொடர்ந்து நான்கு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டிச் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 187 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மருத்துவக் கட்டமைப்பை ஆட்டங்காண வைத்துள்ளது. ஆக்சிஜன், படுக்கை வசதி இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.இச்சூழலில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நோயாளிகளை மருத்துவமனைகளில் சேர்ப்பது தொடர்பான, திருத்தப்பட்ட தேசிய கொள்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி எக்காரணத்தைக் கொண்டும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை மறுக்கப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளது. அதேபோல ஆஜ்சிஜன், மருந்துகளும் தட்டாமல் வழங்க வேண்டும். எந்தப் பாரபட்சமும் பார்க்கக் கூடாது என்று கூறியிருக்கிறது.
மிக முக்கியமாக நோயாளிகளிடம் கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ் கேட்டு வற்புறுத்தக் கூடாது எனவும், கொரோனாவின் லேசான அறிகுறிகள் தென்பட்டாலே மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. சரியான அடையாள அட்டை இல்லை என்ற காரணத்திற்காக எந்த நோயாளிக்கும் மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்படக்கூடாது. மருத்துவமனையில் அனுமதிப்பது தேவையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் விளக்கமளித்துள்ளது.

 

Tags :

Share via