தேனீக்கள் மூலம்  கொரோனா பாதிப்பை  அறியும் முறை

by Editor / 09-05-2021 06:59:00pm
தேனீக்கள் மூலம்  கொரோனா பாதிப்பை  அறியும் முறை

 

நெதர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களை கொரோனாவை எளிதில் கண்டறிய புதியதொரு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் தேனீக்களுக்குப் பயிற்சி அளித்து, அதன் நுகர் திறன் மூலம் கொரோனாவை கண்டறிய முடிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் ஒரு சில நொடிகளில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிந்துவிட முடிவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விலங்குகள் மூலம் கொரோனாவை கண்டறிய எடுக்கப்படும் முதல் முயற்சி இது இல்லை.
ஏற்கனவே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நாய்களின் மோப்ப சக்தி மூலம் கொரோனாவை கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டனர். நாய்கள் 94% வரை கொரோனாவை சரியாகக் கண்டறிவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

 

Tags :

Share via