துபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது

by Admin / 24-11-2018
துபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது

துபாய்: அதிகளவில் ரத்ததானம் தொடங்கி தற்போதைய கஜா புயல் பாதிப்பிற்கு நிவாரண உதவி வழங்கும் முயற்சி என பல்வேறு சமூக நல பணிகளின் ஈடுபடும் அமைப்பாக துபாயில் அரசு பதிவு பெற்ற தமிழகத்தை சேர்ந்தோரை நிர்வாகிகளாக கொண்ட அமைப்பாக ஈமான் கல்சுரல் செண்டர் செயல்பட்டு வருகிறது

இந்த அமைப்பு கடந்த 1976-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. துபாய் அரசு சமூக சேவை அமைப்புகளை முறைப்படுத்த புதிய சட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்தது. அப்போது பதிவு பெற்ற ஒரே தமிழ் அமைப்பாக ஈமான் கல்சுரல் செண்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், பொதுச்செயலாளராக ஏ. ஹமீது யாசின், துணைத்தலைவராக முஹம்மது மஹ்ரூப், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளராக முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளராக திண்டுக்கல் ஜமால் முஹைதீன்,இஸ்லாமியா விழாக்குழு செயலாளர் சாதிக், கல்விக்குழு செயலாளராக திருச்சி பைசுர் ரஹ்மான், ஆடிட்டராக நாகூர் ரவூப், அலுவலக மேலாளராக தேவிபட்டிணம் நிஜாம் அக்பர் அலுவலக செயலாளர் யாகூப் மற்றும் நிர்வாகிகள் இருந்து வருகின்றனர்.

Share via