புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சென்னை மருத்துவமனையில் அனுமதி!

by Editor / 10-05-2021 12:17:26pm
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சென்னை மருத்துவமனையில் அனுமதி!

அண்மையில் புதுச்சேரியின் முதல்வராக என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றுக்கொண்டார்.

நடந்து முடிந்த புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.இதில் மெஜாரிட்டி என்.ஆர்.காங்கிரஸ் என்பதால் அக்கட்சியினர் ஒருமனதாக என்.ரங்கசாமியை முதல்வராக தேர்வு செய்தனர். இதையடுத்து சில தினங்களுக்கு முன்னதாக அவர் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். ஆனால் பதவியேற்றவுடனேயே அவருக்கு உடல்நலம் குன்றியது.

இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து இப்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via