சிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகம்

by Staff / 24-11-2018
சிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஆலய கும்பாபிஷேக மண்டலாபிஷேக நிறைவாக 1080 கலசங்கள் கொண்ட ஸ்ரீ சகஸ்ர கலசாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

சிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகம்

பக்தர்கள் ஆர்வத்துடன் சமர்ப்பித்த அபிஷேகப் பொருட்கள் எம்பெருமானின் திருவடிகளில் சமர்பிக்கப்பட்டு யாகசாலையில் சகஸ்ர கலச ஹோமம் நடைபெற்றது. பிரதான கலசம் தலைமை அர்ச்சகரால் சிரமேற்கொண்டு ஆலயம் வலம் வந்து மூலவருக்கும், மற்ற பரிவார சந்நதிகளிலுள்ள ஸ்ரீ விநாயகப் பெருமான், மகாலட்சுமி தாயார், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ஆண்டாள் ஆகியோரும் அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு பெருமாளின் அருளை பெற்றுச் சென்றனர். மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.