அதிர்ச்சி! மருத்துவமனைகளில் வேகமாக நிரம்பும் படுக்கைகள்!

by Editor / 11-05-2021 08:58:50am
அதிர்ச்சி! மருத்துவமனைகளில் வேகமாக நிரம்பும் படுக்கைகள்!

மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,016ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 32,409 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 6,262 பேருக்கும் அதிகமானோர் சிகிச்சையில் பெற்று வருகின்றனர். மதுரையில் நேற்று ஒரே நாளில் 1024 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள 7 கொரோனா சிறப்பு வார்டுகளில் 1,918 படுக்கை வசதிகள் உள்ளன. அதில் 1,616 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே தற்போது ராஜாஜி அரசு மருத்துவமனை உட்பட 7 அரசு மருத்துவமனைகளில் 302 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது. 17 தற்காலிக கொரோனா சிறப்பு மையங்களில் 2,115 படுக்கைகளில் 1.318 படுக்கைகள் காலியாக உள்ளன.

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை 852இல் 418 படுக்கையில் நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். 296 படுக்கைகள் காலியாக உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை 1,321இல் 415 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 829 படுக்கைகள் காலியாக உள்ளன. 2,272 படுக்கை வசதிகள் கொண்ட தனியார் மருத்துவமனைகளில் 1,180 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 1092 காலி படுக்கைகள் காலியாக உள்ளன. தினம் தினம் தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருவதால் படுக்கைகள் விரைவில் நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via