சிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் தொடரும் குளறுபடிகள்!

by Professor / 24-11-2018
சிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் தொடரும் குளறுபடிகள்!

அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள 1,325 சிறப்பாசிரியர் (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வை நடத்தியது. எழுத்துத் தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) 5 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தற்போது இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இறுதித் தேர்வுப் பட்டியல்தான் வெளியாகிவிட்டதே அதற்கென்ன இப்போது என்றுதானே கேட்கிறீர்கள்? அதில்தான் பிரச்னையே உள்ளது. ஓவியம், தையல் சிறப்பாசிரியர் தேர்வுப் பட்டியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் எழுத்துத் தேர்வு மற்றும் பதிவுமூப்பு சேர்த்து அதிக மதிப்பெண் பெற்றிருந்த பலரின் பெயர் விடுபட்டு, அதற்குப் பதில் அவர்களைக்காட்டிலும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.

Share via