ஆக்சிஜன் நிரப்ப 5 நிமிடம் காலதாமதம்  ஆந்திர மாநில அரசு மருத்துவமனையில்   11 பேர் பரிதாப சாவு 

by Editor / 11-05-2021 04:59:58pm
ஆக்சிஜன் நிரப்ப 5 நிமிடம் காலதாமதம்  ஆந்திர மாநில அரசு மருத்துவமனையில்   11 பேர் பரிதாப சாவு 


ஆந்திர மாநில அரசு மருத்துவமனை ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பதினொரு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள எஸ்.வி.ஆர் ருயா அரசு மருத்துவமனையில் 700க்கும் மேற்பட்ட கொ ரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர் இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனோ நோயாளிகளின் பிரிவில் இருந்த ஆக்சிஜன் கையிருப்பு திடீரென தீர்ந்து விட்டால் அதனை மீண்டும் நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆக்சிஜன் நிரப்பப்படும் பணி 5 நிமிடம் காலதாமதம் ஆனதால் மருத்துவமனையில் 11 உயிர்கள் பரிதாபமாக இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. விரைவாக ஆக்சிஜன் நிரப்பும் பணி நடைபெற்றதால் மற்ற உயிர்கள் காப்பாற்ற பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நாராயணன் கூறுகையில் சென்னையில் இருந்து மருத்துவமனைக்கு வர வேண்டிய ஆக்ஸிஜன் டேங்கர் லாரி வருவதற்கு தாமதம் ஆனதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது மேலும் ஆக்சிஜன் பிரச்சனை காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் இருந்த சில தொற்று நோயா ளிகள் உயிரிழந்ததாக அவர் கூறியுள்ளார் மேலும் இந்த உயிர் இழப்புகள் அனைத்தும் ஐந்து நிமிட இடைவெளியில் நடை பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பதினொரு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via