உளவுப்பிரிவுக்கு முதன்முறையாக பெண் ஐபிஎஸ் அதிகாரி தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயக் குறிச்சியை சேர்ந்தவர் 

by Editor / 11-05-2021 07:12:34pm
 உளவுப்பிரிவுக்கு முதன்முறையாக பெண் ஐபிஎஸ் அதிகாரி தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயக் குறிச்சியை சேர்ந்தவர் 

 


தமிழக காவல்துறை. கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம் உளவுப்பிரிவில் நீண்ட காலம் பணிபுரிந்து அனுபவம் வாய்ந்தவர். அதனால் அவருக்கு உளவுத்துறை தலைவர் பதவியை புதிய  திமுக அரசு வழங்கியுள்ளது. அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரியாக டிஐஜி அந்தஸ்த்தில் பெண் அதிகாரியான ஆசியம்மாள் அமர்த்தப்பட்டுள்ளார். இது  தமிழக காவல்துறையிலேயே முதன்முறையாகும்.
குரூப்ஒன் அதிகாரியான ஆசியம்மாள் நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். 56 வயது நிறைந்த இவர் எம்எஸ்சி, எம்டெக் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றவர். தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயக் குறிச்சி இவர் பிறந்த ஊர்.முதல் பணியாக மதுரையில் வரதட்சணைக் கொடுமைத் தடுப்புப்பிரிவில் ஆசியம்மாளுக்கு டிஎஸ்பி பணி வழங்கப்பட்டது.
அதனையடுத்து மகாபலிபுரம் டிஎஸ்பி, சென்னை திருவொற்றியூர் சட்டம் ஒழுங்கு உதவிக்கமிஷனர், சென்னை போக்குவரத்துப் புலனாய்வுப்பிரிவு உதவிக்கமிஷனராகவும் பணிபுரிந்தார். அதன் பிறகு தேனி ஏடிஎஸ்பியாக ஆசியம்மாள் இரண்டே முக்கால் வருடங்களும், தமிழக உளவுப்பிரிவான எஸ்பிசிஐடியில் இரண்டே முக்கால் ஆண்டுகளும் திறம்பட பணிபுரிந்தார்.அதனையடுத்து எஸ்பியாக பதவி உயர்ந்து லஞ்ச ஒழிப்புப்பிரிவில் 3 ஆண்டுகள் திறமையாக பணிபுரிந்து தனி முத்திரை பதித்தார். 
பின்னர் பூக்கடை துணைக்கமிஷனர், அதனையடுத்து சென்னை நகர தலைமையிட துணைக்கமிஷனராக 2 ஆண்டுகளும், உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு, சிபிசிஐடி போன்ற பிரிவுகளிலும் எஸ்பியாக பணிபுரிந்தார்.
பின்பு கடந்த 2018ம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்ந்து போலீஸ் பயிற்சிப் பள்ளி மற்றும் டெக்னிக்கல் சர்வீஸில் பணியாற்றினார். அதனையடுத்து அவருக்கு தற்போது உளவுப்பிரிவு டிஐஜியாக பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via