நடிகர் சீயான் விக்கிரமின் மகன் களமிறங்குகிறார்.

by Admin / 19-02-2019
நடிகர் சீயான் விக்கிரமின் மகன் களமிறங்குகிறார்.

சீயான் விக்ரமின் மகன் துருவ், தெலுங்குப் படமான ‘அர்ஜுன் ரெட்டி’-யின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படம் பாலா இயக்கத்தில் முழுவதுமாக முடிவடைந்த நிலையில், இப்படத்தை கைவிடுவதாக தயாரிப்பாளர் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

நடிகர் சீயான் விக்கிரமின் மகன் களமிறங்குகிறார்.

பின்னர் படத்தின் படப்பிடிப்பை முதலில் இருந்து ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்த தயாரிப்பாளர், துருவை தவிர மற்ற அனைவரும் மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் கூறினார். இதனால், ‘வர்மா’ படத்தை கெளதம் மேனன் இயக்குவார் என்றும் தகவல்கள் வெளியான நிலையில் அவரும் மறுத்துவிட்டதாக ஒரு பேச்சு உலாவரும் நிலையில் இந்த படத்தில் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி பனிதா சந்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ‘அக்டோபர்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.எது வந்தாலும் பரவாயில்லை என தயாரிப்பளார் முடிவு செய்து படத்தின் கதாநாயகன் கதாநாயகி குறித்து தனது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.