முதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்திற்கு ஸ்டாலின் நேரில்வந்து ஆதரவு-பரபரக்கும் புதுச்சேரி

by Admin / 19-02-2019
முதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்திற்கு ஸ்டாலின் நேரில்வந்து ஆதரவு-பரபரக்கும் புதுச்சேரி

புதுவையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி நடத்தி வரும் தர்ணா போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் வந்து தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.

முதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்திற்கு ஸ்டாலின் நேரில்வந்து ஆதரவு-பரபரக்கும் புதுச்சேரி

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:காவல்துறை ஆணையராக கிரண்பேடி திறம்பட செயல்பட்டு இருக்கலாம். ஆனால் தற்போது ஆளுநராக பாஜகவிற்கு வேலை பார்ப்பது ஜனநாயக விரோத செயல். மோடி கவனிக்காதது வெட்கப்பட வேண்டிய செயல். கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.சின்னத்தம்பியை போல் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும்.பதவி ஏற்றது முதல் அரசுக்கு கிரண்பேடி ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஆளுநர்களை வைத்து கொல்லைப்புபற ஆட்சிக்கு வர பாஜக விரும்புவது நடக்காது. முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சர்கள் 5 வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட கூடிய வேலையை ஆளுநர் செய்து வருகிறார். புதுவை மாநிலத்தில் ஆளுநராக பொறுப்பேற்ற ஆளுநர் ஜனநாயகத்தினை குழிதோண்டி புதைக்கும் வேலை செய்து வருகிறார்.மோடி தர்ணா போராட்டம் குறித்து கண்டு கொள்ளாமல் உள்ளது வெட்ககேடு. இதனை கடுமையாக கண்டிக்கிறேன்.திருப்பூரில் யானையை பிடித்து டாப்சிலிப்பில் அடைத்து வைத்துள்ளார்கள். இதேபோல் மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும். புதுச்சேரியில் பாஜக கொள்ளை புறமாக ஆட்சி நடத்த முயற்சி செய்கிறது தைரியம் இருந்தால் தேர்தலில் நின்று வெற்றி பெறுங்கள் என பாஜக வினை சாடியுள்ளார்.கமல் குறித்த கேள்வி அரசியல் பற்றி நான் பேசுகிறேன் என்று தெரிவித்தார். இந்த நிலையில் டெல்லி சென்றிருந்த கிரண்பேடி 5 நாளைக்கு பிறகு ஆளுநர் மாளிகைக்கு திரும்பினார் கிரண்பேடி. இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.இதனைத்தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் அரை மணி நேரத்திற்கு முன் கிரண்பேடியின் ஆலோசகர் தேவநீதிதாஸ் என்னுடைய செயலருக்கு 6 மணிக்கு சந்திக்க அழைப்பு விடுத்தார். கூட்டணி கட்சிகளுடன் பேசி கூட்டத்தில் பங்கேற்க உள்ளோம். தலைமை செயலர் மற்றும் துறை செயலர்கள் இருக்க நிபந்தனை விதித்துள்ளோம். கூட்டத்திற்கு பிறகு ஆளுநரின் நடவடிக்கை பொருத்தே அடுத்த நடவடிக்கை - என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.