ஸ்ரீ அண்ணாமலை ஞானதேசிக சுவாமிகள்

by Admin / 19-02-2019
ஸ்ரீ அண்ணாமலை ஞானதேசிக சுவாமிகள்

ஒகேனக்கல் : தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் ஸ்ரீ அண்ணாமலை ஞானதேசிக சுவாமிகள் மடாலயத்தின் முன்றாவது மடாதிபதி ஸ்ரீமத் சுவாமி அம்சானந்த சரசுவதி மகாராச் நேற்று இரவு9.00மணிஅளவில் சமாதி அடைந்தார்.

பென்னாகரம் அருகே போ டூர் கிராமத்தை சேர்ந்த அம்ச ராஜ், இவருக்கு வயது 77 இவர் அன்னை காவேரி நதி நீர் பாதுகாப்பு அறக்கட்டளையின் துணை தலைவராகவும் அண்ணாமலை ஞானதேசிக சுவாமிகள் மடாலய அறக்கட்ளை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்ற இவர் பென்னாகரம் மற்றும் ஒசூர் பகுதியில் வி.ஏ.ஓ வாக பணியாற்றி ஓய்வு பெற்று தமது முன்னோர்களின் ஆணைப்படி அண்ணாமலை சுவாமிகள் மடாலயத்தில் சேவையாற்ற துவங்கினார் ராமகிருட்டினர் அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் ஆகியோர்களின் தீவிர சீடரான இவர் அவர்கள் வழியில் பல்வேறு ஆன்மீக மற்றும் பொது சமூக அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு காவிரி நீர் பாது காப்பு சுற்று சூழல் உள்ளிட்ட துறைகளில் சேவை யாற்றி வந்தார் மேலும் இவர் அகில பாரத துறவியர் சங்கத்துடன் காவேரி பாது காப்பு யாத்திரை நடத்தியதில் பெரும் பங்காற்றினார் இவரது பூத உடல் இந்து சமய முறைப்படி பல்வேறு ஆதினங்கள் மடாதிபதிகள் ஆச்சாரியார்கள் முன்னிலையில் மடாலய வளாகத்தில் இன்று மதியம் 12 மணி அளவில் முக்தி செய்யப்பட்டது இவருடைய தந்தை ராஐகோபால் நாயுடு முன்னாள் வி.ஏ.ஓ அவர் பென்னாகரம் நகரில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு தனது நிலங் களையை கொடையாக வழங்கியவர் இவரது குடும்பம் விஐய நகர பேரரசின் செஞ்சி நாயக்கர் மன்னர்கள் வழி வந்தவர்கள் என்று கூறப்படுகிறது இவரது முக்தி இடத்திற்கு இன்னாள், முன்னாள் சட்டமன்னற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசில் கட்சி பிரமுகர்கள் பல்வேறு சமூக அமைப்பு தலைவர்கள் ஆன்மீகவாதிகள் வந்து மரியாதை செலுத்தினர்.

Share via