தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு நடிகர் ரஜினிகாந்த்

by Admin / 19-02-2019 / 0 comments
தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள பரப்பரப்பு அறிக்கை வருமாறு: வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை.

தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு நடிகர் ரஜினிகாந்த்

தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு. நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு, எந்த கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ , மன்றத்தின் கொடியோ எந்த கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரசாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது. மேலும் தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர். வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான ஆட்சி அமைத்து, யார் தமிழ் நாட்டின் தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுவார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து, ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.