புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

by Admin / 01-03-2019
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

தமிழகத்தில் அதிமுக கட்சி பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இது சந்தர்ப்பவாத கூட்டணி.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

தமிழக மக்களுக்கு துரோகம் செய்த கட்சி பாஜக. புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கும் முறையான நிதியை கொடுக்காமல் குந்தகம் விளைவிக்கிறார்கள். பாஜக, அதிமுகவை பணிய வைத்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இரு மாதங்களுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்திருக்கிறது என சொன்ன பாமக சந்தர்ப்பவாத கூட்டணியில் சேர்ந்திருக்கிறது. இது தமிழக மக்களுக்கு தெரியும். நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு எந்த வித திட்டத்தையும் கொடுக்கவில்லை. கஜா புயல் பாதிப்பின் கணக்கெடுப்பின்படி கொடுக்கப்பட வேண்டிய நிதியை கூட கொடுக்கவில்லை. நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு பிரச்சனை என தொடர்ந்து தமிழக மக்களுக்கு விரோதமாக பாஜகவும், அதிமுகவும் செயல்பட்டுவருகிறது. இதனால் மக்கள் இந்த கூட்டணிக்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.