போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.

by Admin / 01-03-2019
போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  பேட்டி.

தமிழகத்தில் முதல்முறையாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 100 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் கரூரில் போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் தார் சாலை அமைத்தல் சிமெண்ட் சாலை அமைத்தல் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட 16 பணிகளுக்கு 10 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் நடக்க இருக்கும் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விழாவில் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.முதல் நிகழ்வாக அமராவதி ஆற்றின் உள்பகுதிகளில் புதர்போல் மண்டிக்கிடக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை தொடங்கி வைத்த தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக 3 பிளஸ் 2 பேருந்துகளில் ஏசி வசதி செய்து தரப்படும். முதன்முதலாக 100 பேருந்துகள் முதல்வர் தொடங்கி வைப்பார்.சென்னை மாநகரத்தில் 50 ஏசி பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் தேமுதிக அதிமுக கூட்டணியில் இணையுமா? என்கிற கேள்விக்கு வரும், விரைவில் வரும் என்றார்.தொடர்ந்து தமிழக முதல்வரும் துணை முதல்வரும் மெகா கூட்டணி அமைத்துள்ளார்கள்.இந்த கூட்டணி தமிழகத்தில் இரட்டை இலை போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார். பேட்டி: விஜயபாஸ்கர் -தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

Share via