ஆசிரியை கொலை வழக்கு கொலையாளி தற்கொலை

by Admin / 01-03-2019
ஆசிரியை கொலை வழக்கு கொலையாளி தற்கொலை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் 22 தேதி தனியார் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை ரம்யாவை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த கொலையாளி ராஜசேகர் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தொப்பையான்குளம் என்ற இடத்தில் முந்திரிக்காட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆசிரியை கொலை வழக்கு கொலையாளி தற்கொலை

குறிஞ்சிப்பாடியில் பள்ளிக்குள் சென்று ஆசிரியையை வெட்டி கொன்ற கொலையாளி ராஜசேகரின் மோட்டார் சைக்கிள் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே தொப்பையன்குளம் என்ற இடத்தில் முந்திரி காட்டில் தனியாக நின்றதை அந்த பகுதியில் இருந்தவர்கள் பார்த்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளில் நின்ற இடத்திற்கு சற்று தொலைவில் ராஜசேகர் முந்திரி மரத்தில் தூக்கில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் குறிஞ்சிப்பாடி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்தில் தற்போது திருநாவலூர் போலீசார் ராஜசேகர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.