பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு -கருணாஸ்

by Admin / 01-03-2019
பாராளுமன்ற தேர்தலில்  யாருக்கு ஆதரவு  -கருணாஸ்

எதிர்வரும் 27ஆம் தேதி தங்கள் அமைப்பின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை முக்குலத்தோர் புலிப்படை முடிவு செய்யும் . முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது கிடைத்த வாக்கு சதவிகிதம் தற்போது கிடைக்காது நிச்சயம் அதிக வாக்குகளை தினகரன் பிரிப்பர். கடந்த மாதம் வரை அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் பட்டியல் தயாரித்து கவர்னரிடம் கொடுத்த பாமக ராமதாஸ் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன். தமிழகத்திற்கு பணியமர்த்தப்படும் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் திராவிட கட்சிகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று கூறிய பாஜக தற்போது திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.நடிகரம்,சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ்

Share via