மதுரை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேட்டி

by Admin / 01-03-2019
மதுரை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேட்டி

அதிமுக தலைமையில் தேசிய மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இது வெற்றிக் கூட்டணியாக அமையும் பாஜக . பாமக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது ?மேலும் மக்கள் நலனை விரும்பும் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது

இன்னும் ஓரிரு தினங்களில் கட்சியின் எண்ணிக்கை அடிப்படையிலான கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று யார் யாருக்கு எந்தெந்த தொகுதி ஒதுக்கப்படும் என்று படிப்படியாக அறிவிக்கப்படும். தேமுதிக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது 95% சதம் மக்கள் எங்கள் பக்கம் உள்ளதால் 38 தொகுதிகளில் தினகரன் வெற்றி பெறுவோம் என்பது பற்றிய கேள்விக்கு அவர் தனியாக ஒரு குழு ஆரம்பித்து அந்த காலம் முதல் இன்று வரை அவர் சொல்வது எதுவும் நடைபெறவில்லை . நேற்று முன்தினம் கூட ஒரு கருத்து கூறியுள்ளார் இந்தியாவின் பிரதமரையே தீர்மானிக்கக் கூடிய சக்தியாக அமமுக இருக்கும் என்று மிகப்பெரிய வெடிக்கையாக வெளியுட்டுள்ளார். இதிலிருந்து அவருடைய அரசியல் வெளி தன்மையை அறிந்து கொள்ளலாம். என துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார். முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் தொண்டர் களுக்கு இனிப்பு வழங்கினார்.

Share via