பதவி்யில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் கோவையில் அறிவித்துள்ளார்.

by Admin / 01-03-2019
பதவி்யில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் கோவையில் அறிவித்துள்ளார்.

பாமக மாநில துணை தலைவர் பதவி்யில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் கோவையில் அறிவித்துள்ளார். மதுக்கடைக்கு எதிராக போராடிவிட்டு அதிமுகவுடன் எப்படி பாமக கூட்டணி வைக்க முடியும்? நாலு பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது. தரக்குறைவாக விமர்சித்துவிட்டு கூட்டணி வைத்துள்ளதை என்னால் ஏற்கமுடியவில்லை. அதனால்தான் அக்கட்சியில் இருந்து விலகுகிறேன். குடும்பத்தினருடன், பொதுமக்களுடன் நன்கு ஆலோசித்த பிறகே இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Share via