கரூர்

by Admin / 01-03-2019
கரூர்

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்தது போல் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. அதுபோல் பிஜேபிக்கும் ஒரு கொள்கை உண்டு. கூட்டணிக்காக கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

கரூர்

எங்களைப் பொறுத்தவரை பொது எதிரி காங்கிரஸ் திமுக அவர்களை வீழ்த்த வேண்டும். 18 ஆண்டுகள் மத்தியிலும் பதினோரு ஆண்டுகள் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக காலத்தில்தான் கச்சத்தீவு விவகாரம் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் நடந்தது. இதனை ராஜபக்சவே ஒப்புக்கொண்டுள்ளார். தமிழர்களுக்கு துரோகம் செய்த இவர்களை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி பொறுப்புக்கு வர விடமாட்டோம். ஸ்பெக்ட்ரம் ஊழல் ஏர் மேக்சிஸ் ஊழல் போன்றவற்றுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டி பிஜேபி இடம் கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்களும் அதன் பேரில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்தோம். இதன் விளைவாக காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தது. மேகதாது அணை விவகாரத்தில் பாராளுமன்றத்தை முடக்கி குரல் எழுப்பினோம். அதிமுக தலைமையிலான கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறும். ஜி எஸ் டி யில் ஐந்தாயிரம் கோடி, இழப்பீட்டு தொகை போன்றவை வரவேண்டியுள்ளது அதனை கேட்டுப் பெறுவோம். காவிரியில் வெள்ள காலங்களில் வரும்போது நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும். அதிமுக மீது அரசியலுக்காக குற்றம் சுமத்தி வருகிறார்கள். 2012ல் காங்கிரஸ் தலைமையிலான அரசு தான் நீட் தேர்வுக்கு அனுமதி வழங்கியது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னம நாயக்கன்பட்டி பகுதியில் பொதுமக்களின் குறை கேட்டு மனுக்கள் பொது நிகழ்ச்சியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி