பட்டாசு ஆலையில் தீ 5பேர் கொடூர பலி

by Admin / 01-03-2019
பட்டாசு ஆலையில் தீ 5பேர் கொடூர பலி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள திருவேங்கடம் வரகனூரில் தனியார் பட்டாசு செயல்பட்டு வருகிறது.இன்று காலை தொழிலாளர்கள் வேலைக்கு சென்று விட்டு மத்திய உணவு வேலை முடிந்தபின்னர் மீண்டும் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.

அப்போது எதிர்பாராத வண்ணம் ஆலையில் திடீர் என தீப்பற்றி கொண்டதில் தொழிலாளர்கள் யாரும் வெளியேற முடியவில்லை.ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறிவருவதால் கட்டிடங்களும் சேதமடைந்தன.தொடர்ந்து பட்டாசு வெடித்து வருவதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 5 பேர் பலியென தெரியவந்துள்ளது இதில் 4 பெண்கள் 1 ஆண் அடங்குவார்.இந்த விபத்தில் கட்டிடங்கள் இடிந்து நாசமாயின.இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு மருத்துவ குழுவினர் மற்றும் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் ,நெல்லைமாவட்ட உயர் அதிகாரிகள் குழு விரைந்துள்ளனர்.

Share via