ஜம்மு -காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: தேடுதல் வேட்டை தீவிரம்

by Admin / 13-11-2018 / 0 comments
ஜம்மு -காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: தேடுதல் வேட்டை தீவிரம்

ஸ்ரீநகர் : ஜம்மு -காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு -காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: தேடுதல் வேட்டை தீவிரம்

ஜம்மு -காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் கிரண் செக்டர் பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் அப்பகுதியில் வேறு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதனைபோன்று ஜம்மு-காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் இன்று ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு மாவட்டத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று இந்திய எல்லையோர பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அக்னூர் எல்லைக்கோட்டின் அருகேயுள்ள பல்லன்வாலா பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து ஒரு பயங்கரவாதி ஆயுதங்களுடன் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றான். இதனை கவனித்த இந்திய பாதுகாப்பு படையினர் அவனை திரும்பிப் போகுமாறு எச்சரித்தனர். இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டவாறு முன்னேறி வந்தான். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் அந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும் அவனிடமிருந்து ஏ.கே.47 ரக இயந்திர துப்பாக்கி, கைத்துப்பாக்கி மற்றும் வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.