நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி

by Admin / 01-03-2019
நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டத்தில் கடந்த சிலதினங்களாக கடுமையான வெயில் பங்குனி,சித்திரை மாதத்தில் அனல் பறப்பது போல இப்போதே மக்களை வாட்டி வதைத்து வருகின்றது.அடிக்கும் அனல் காற்றில் மக்கள் வெளியே செல்லவே அச்சப்படும் நிலையாகி உள்ளது

இந்த நிலையில் இன்று நெல்லைமாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலொடு பலத்த மழை பெய்து வருகின்றது.சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் கலிங்கப்பட்டி திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.வடகிழக்கு பருவமழை பொய்த்துபோனதால் தவிப்பில் இருந்த விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சிஅடைந்தனர்.இதே போன்று மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான செங்கோட்டை வட்டாரத்திலும் கடந்த சிலதினங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகின்றது.மேலும் பல பகுதிகளில் நீர்நிலைகளில் மழையில்லாததால் வறண்ட நிலையை நோக்கி சென்றுவருகின்றன.வடகிழக்கு பிசான நெல் சாகுபடி செய்த விவசாயிகள் நிலங்களில் நெல்பயிர்கள் பால் பிடித்து பொதி வந்துள்ள நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு வந்துவிடுமோ என்று அஞ்சிய நிலையில் இன்று இடி..மின்னலோடு பெய்த பலத்த மழை நெல்பயிர்களை கருகிவிடாமல் காப்பாற்றியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மழையின் காரணமாக சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.மேலும் தென்காசி பகுதியிலும் இலேசான மழை பெய்தது.

Share via