அமைச்சரின் அறையில் ஐ . டி . ரெய்டு ! நள்ளிரவில் பரபரப்பு

by Editor / 15-04-2019
அமைச்சரின் அறையில் ஐ . டி . ரெய்டு ! நள்ளிரவில் பரபரப்பு

சென்னையில் எம்எல்ஏக்கள் தங்கும் விடுதியில் உள்ள அமைச்சர் ஆர். பி . உதயகுமாரின் அறையில், வருமான வரித் துறையினர் நேற்று நள்ளிரவு திடீர் சோதனை நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .

அமைச்சரின் அறையில் ஐ . டி . ரெய்டு ! நள்ளிரவில் பரபரப்பு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் சட்டமன்ற ௨றுப்பினர்கள் தங்கும் விடுதியில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் வருமானவரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்றிரவு சோதனை மேற்கொண்டனர் . விடுதியில் தங்கியிருந்த அமைச்சர் ஆர் . பி . உதயகுமார் அறையிலும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையால் பரபரப்பு நிலவியது . சோதனையில் பணம் எதுவும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரியவில்லை

Share via