திருப்பதி ரயில்வே காவல்துறையின் பிடியில் தாடியுடன் முகிலன் இருக்கும் வீடியோ காட்சி வெளியானது. கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்காதே என முழக்கமிட்டபடி முகிலன் செல்லும் வீடியோ வெளியானது

by Editor / 07-07-2019 07:28:21am
திருப்பதி ரயில்வே காவல்துறையின் பிடியில் தாடியுடன் முகிலன் இருக்கும் வீடியோ காட்சி வெளியானது.  கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்காதே என முழக்கமிட்டபடி முகிலன் செல்லும் வீடியோ வெளியானது

திருப்பதி ரயில்வே காவல்துறையின் பிடியில் தாடியுடன் முகிலன் இருக்கும் வீடியோ காட்சி வெளியானது. கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்காதே என முழக்கமிட்டபடி முகிலன் செல்லும் வீடியோ வெளியானது.

திருப்பதி ரயில்வே காவல்துறையின் பிடியில் தாடியுடன் முகிலன் இருக்கும் வீடியோ காட்சி வெளியானது.  கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்காதே என முழக்கமிட்டபடி முகிலன் செல்லும் வீடியோ வெளியானது

பரபரப்பாக பேசப்பட்ட காணாமல் போன முகிலன் திருப்பதி ரயில் நிலையத்தில் போலிசார் பிடித்தனர்.. சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் காணாமல்போய் சுமார் 3 மாதகாலம் ஆனது இதுதொடர்பான வழக்கை தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்தனர். ஆகையால் சிபிசிஐடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அதில் நோட்டீஸில், “சென்னை சிபிசிஐடி குற்ற எண் 2/2019-ன் படி, 15.02.2019 அன்று இரவு சென்னை-மதுரை மகால் விரைவு இரயிலில் பயணம் செய்ய, சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றார். அங்கு சென்றவர் காணாமல் போய் உள்ளார்” என தெரிவிக்கப்பட்டது. மேலும் இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் சென்னை சிபிசிஐடி எழும்பூர் அலுவலகத்தில் அல்லது சிபிசிஐடி கட்டுப்பாட்டு அறை எண் : 044 28513500-ல் தகவல் கொடுக்கலாம்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மணல் கடத்தலுக்கு எதிரான போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களின் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் சமூக ஆர்வலர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்டார். செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர், மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலனை காணவில்லை என்று கூறப்படுகிறது. முகிலனுக்கு ஆதரவாக பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பரபரப்பான சூழலில் சமூக ஆர்வலர் முகிலன் திருப்பதி ரயில் நிலையத்தில் அவரது நண்பர் திருப்பதி காவல்துறையினர் அவரை அழைத்து வருவதை பார்த்து அவருக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது பேரில் தற்போது அவரை திருப்பதியில் இருந்து காட்பாடி வழியாக சென்னைக்கு அழைத்து செல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரப் பரப்பை உருவாக்கி உள்ளது. காட்பாடி ரயில்வே நிலையம் கொண்டு வரப்பட்ட சமூக செயல்பாட்டாளர் முகிலன் தமிழக சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைப்பு..

Share via