ஜன சதாப்தி ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து

by Editor / 11-07-2019 07:22:03pm
 ஜன சதாப்தி  ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து

கோயமுத்தூரில் இருந்து மயிலாடுதுறை வந்த ஜன சதாப்தி ரயில் மயிலாடுதுறை ரயில்வே நிலையம் அருகில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

 ஜன சதாப்தி  ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஜன சதாப்தி ரயில் தடம் புரண்டு விபத்து கோயமுத்தூரில் இருந்து மயிலாடுதுறைக்கு வார நாட்களில் செவ்வாய்க்கிழமை தவிர பிற நாட்களில் ஜன சதாப்தி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை எடுப்பதற்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஈரோடு திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை வந்து இருந்து மீண்டும் இரண்டாம் பதற்கு மயிலாடுதுறைக்கு கோயம்புத்தூர் வந்து சேரும் 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் இருக்கை வசதிகள் கொண்டதாகவும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்வது வழக்கம் இன்று கோயமுத்தூரில் இருந்து மயிலாடுதுறை வந்த ஜன சதாப்தி ரயில் மயிலாடுதுறை ரயில்வே நிலையம் அருகே ஒரு வளைவில் திரும்பும் போது இன்ஜின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு புரண்டு தடுமாறியது இதனிடையே ரயில் டிரைவர் ரயிலை சாமர்த்தியமாக நிறுத்தினார் இதில் 10க்கும் மேற்பட்ட ஸ்லீப்பர் கட்டைகள் உடைந்து சேதமடைந்தது தொடர்ந்து பயணிகள் அனைவரும் இருப்புப் பாதை வழியே நடந்து ரயில்வே நிலையத்தை சென்றடைந்தனர் திருச்சி சென்னை இடையிலான மெயின் லைன் வழித்தடத்தில் இந்த விபத்து நடந்து இருப்பதால் இவ்வழியே செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன மயிலாடுதுறை வழியே ரயில் போக்குவரத்து சரி செய்ய பல மணி நேரம் ஆகும் என்பதால் மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

Share via