இந்தியா சார்பாக கே.ஜெனித்தா ஆண்டோ கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார்

by Editor / 07-07-2019 07:39:23pm
இந்தியா சார்பாக கே.ஜெனித்தா ஆண்டோ கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார்

19வது உலக உடல் ஊனமுற்றோர் தனிநபர் செஸ் போட்டி 2019 , சுலோவாக்கியா நாட்டில் ரூசோம்பர்க் என்ற நகரில் கடந்த 27ம் தேதி முதல் 06 ம் தேதி வரை நடைபெற்றது. 13 நாடுகளை சேர்ந்த 44 விளையாட்டு வீரர்களும் , வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.

19வது உலக உடல் ஊனமுற்றோர் தனிநபர் செஸ் போட்டி 2019 , சுலோவாக்கியா நாட்டில் ரூசோம்பர்க் என்ற நகரில் கடந்த 27ம் தேதி முதல் 06 ம் தேதி வரை நடைபெற்றது. 13 நாடுகளை சேர்ந்த 44 விளையாட்டு வீரர்களும் , வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். இந்தியா சார்பாக கே.ஜெனித்தா ஆண்டோ கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார் . உலக போட்டியில் ஜெனித்தா 6 வது முறையாக தங்கம் வென்று இந்த உலக போட்டியில் பெண்கள் பிரிவில் சாதனை படைத்துள்ளார் . இறுதி போட்டியில் ஜெனித்தா ரஷ்ய வீராங்கனையை தோற்கடித்து தங்கம் வென்றார். உலக அளவில் போட்டியில் 6 முறை தங்கம் வென்ற கே. ஜெனித்தாவிற்கு மக்கள் சக்தி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Share via