அமமுக நிறுவன தலைவர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி

by Editor / 08-07-2019 11:00:57pm
 அமமுக நிறுவன தலைவர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி

விருத்தாசலம் அமமுக கட்சி நிர்வாகி திருமணத்திற்கு வந்த அமமுக கட்சி நிறுவன தலைவர் டிடிவி தினகரன் மணமக்களை வாழ்த்திய பின்பு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

விருத்தாசலம் அமமுக கட்சி நிர்வாகி திருமணத்திற்கு வந்த அமமுக கட்சி நிறுவன தலைவர் டிடிவி தினகரன் மணமக்களை வாழ்த்திய பின்பு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, அமமுக கட்சியானது, தொண்டர்களால் பயன்படுத்தப்படும் இயக்கம் என்றும், ஒரு சில நிர்வாகிகள் சுய காரணத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் வேறு கட்சிக்கு செல்வதால் அமமுக கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறினார். அமமுக கட்சியினரை லெட்டர் பேட் கட்சி என்று கூறும் சில கட்சிகள், அமமுக கட்சியினரை காவல்துறை மூலம், மிரட்டி , குண்டாஸ் உள்ளிட்ட வழக்குகளில் பதிவு செய்வோம் என்று கூறி தனது கட்சியில் சேர்த்துக் கொள்கின்றனர். தற்போது தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்பதை தமிழக அரசு விட்டுவிட்டு, அமமுக கட்சி சீர்குலைந்து விட்டது என்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கட்சியினர் போட்டியிடவில்லை என்றும், அமமுக கட்சியினை பதிவு செய்த பின்னர் தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும் கூறினார். அமமுக கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்சி பதிவு செய்த பின்னர் கிடைக்கும் நிறைந்த சின்னத்தை கொண்டு தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால் தேர்தலில் நிற்கவில்லை என்று சில பேர் கூறினாலும், கட்சி நிர்வாகிகள் கூறியது போல் அமமுக கட்சி பதிவு செய்த பின்னர் தான் தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார். வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டால் பரிசுபெற்ற கிடைப்பது சந்தேகம் என்றும், அதேபோல் நாங்குநேரி, விக்ரவாண்டி உள்ளிட்ட தொகுதியில் போட்டியிடும் போது சுயேட்சையாக தனித்தனி சின்னம் கிடைத்து கிடைக்கக் கூடும் என்பதால் கட்சி பதிவு பெற்ற பின்னரே தெரிவிப்பதாக அறிவித்தார். பேட்டி: டிடிவி தினகரன் அமமுக நிறுவன தலைவர்

Share via