காவலருக்கு அரிவாள் வெட்டு

by Editor / 08-07-2019 11:14:09pm
காவலருக்கு அரிவாள் வெட்டு

🚨பட்ட பகலில் தலைமை காவலருக்கு அரிவாள் வெட்டு

 

திருச்சி உக்கடை அரியமங்கலம் வடக்கு பகுதியில் போதையில் இருந்த ஒருவனை அரியமங்களம் காவல்துறை தலைமை காவலர் ஹரிஹரன் எச்சரித்து உள்ளார். இதனால் போதையில் இருந்த அந்த ஆசாமி ஆத்திரம் அடைந்து காவலரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த அரியமங்கள காவல் துறையினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தப்பி ஓடியவனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

காவலருக்கு அரிவாள் வெட்டு

திருச்சி ஏட்டுக்கு அரிவாள் வெட்டு.. பட்டபகலில் போதை ரவுடியின் அட்டகாசம்

 

திருச்சி அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் ஹரிஹரன் (40). இவர் நேற்று மதியம் உக்கடை அரியமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் இருந்தார். அப்போது மீன்வியாபாரியான ரவுடி உக்கடை இஸ்மாயில் மெடிக்கலில் தகறாறு செய்வதாக தகவல் கிடைத்தது. அங்கு ஹரி சென்ற போது இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது ரவுடி இஸ்மாயில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ஏட்டு ஹரியை அரிவாளால் தலை மற்றும் கை ஆகிய இடங்களில் வெட்டினார். ஏட்டு ஹரியின் சத்தத்தை கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் ரவுடி இஸ்மாயில் ஓடி விட்டார்.

 

படுகாயமடைந்த ஹரி சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏட்டு ஹரிஹரன் போலீஸ் யூனிபார்மில் இருக்கும் போது ரவுடி இஸ்மாயில் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டபகலில் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு விழுந்த விவகாரம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share via