தமிழக செய்தி மற்றும் விளம்பத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில்

by Editor / 11-07-2019 05:31:55pm
 தமிழக செய்தி மற்றும் விளம்பத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில்

தமிழகத்தில் என்றைக்கும் திராவிட கட்சி ஆட்சிகள் நீடிக்கும் - அமைச்சர் கடம்பூர். செ.ராஜீ

கோவில்பட்டி அருகேயுள்ள கட்டலாங்குளத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் 

கட்டலாங்குளத்தில் சேதமடைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோன் அரண்மனை சீரமைக்கப்படும், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பென்சன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்

முகிலனை காணமால் போன போது பல அரசியல் கட்சிகள் அரசியலுக்காக பல கட்டுகதைகள் கூறினார்கள். இன்று அவர் மீட்கப்பட்டு இருக்கிறார்.

உணர்ச்சியின் காரணமாக ஆங்கங்கே ஆணவக்கொலைகள் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழக அரசு அது கட்டுப்படுத்தி வருகிறது மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றச்செயல்கள் சதவீதம் குறைவு மற்றும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

நீட் தேர்வு குறித்து அரசு இதழிலில் வெளியிட்டது அன்றைய காங்கிரஸ், திமுக அரசுகள் தான். இதற்கு அதிமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. 

நீட் தேர்வுக்கு வித்தவிட்டார்கள் திமுக காங்கிரஸ் தான், பா.ஜ.கவிற்கு அமுல்படுத்தவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நீட் தேர்வு பற்றி கடந்த 1 வார காலமாக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. அங்கு வந்து தனது கருத்துகளை கூறமால் வெளியில் செல்லும் டி.டிவி.தினரகன் சட்டமன்ற உறுப்பினர் தானே அவர் ஏன் ? உண்மையில் அக்கறை இருந்தால் சட்டமன்றத்தில் எடுத்துரைக்கலாமே

ஜனநாயக கடமையை ஆற்றமால் வெளியில் செல்லும் டி.டி.வி கருத்துக்களுக்கு பதில் கூறமுடியாது

கர்நாடாக, கோவா நிலைமை தமிழகத்திற்கு வருமா ? என்ற கேள்விக்கு

அது கற்பனையான கேள்வி, 2021வரை அதிமுக ஆட்சி தான், அதன் பின்பு எங்கள் ஆட்சி தொடரும் தமிழகத்தில் என்றைக்கும் திராவிட கட்சிகள் ஆட்சி தான் நீடிக்கும் என்றார்.

 

Share via