தேனி மாவட்ட காவல்துறை விபத்துக்களை தவிற்பதற்கு புதிய முயற்சி

by Editor / 11-07-2019 08:07:43pm
தேனி மாவட்ட காவல்துறை விபத்துக்களை தவிற்பதற்கு புதிய முயற்சி

விபத்து ஏற்படும் இடங்களில் தண்டனைச்சட்டப் பிரிவு எண் மற்றும் பொம்மையை சாலையில் வரைந்து விபத்துக்களை தவிற்பதற்கு தேனி காவல்துறையினர் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர்.

 

 

தேனி மாவட்ட காவல்துறை விபத்துக்களை தவிற்பதற்கு புதிய முயற்சி

 தேனி மாவட்ட காவல்துறை புதிய முயற்சி

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களில் தேனி மாவட்டமும் ஒன்று.தினமும், வியாபாரத்திற்காகவும், தொழில் சம்பந்தமாகவும், மலைத்தோட்டங்களில் வேலை செய்வதற்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள் தேனி எல்லையைக் கடந்து கேரளாவிற்குள் செல்கின்றனர்.

 அதே போல, மருத்துவம், வியாபாரம் போன்ற காரணத்திற்காக கேரளாவினரும் தேனிக்குள் வருகின்றனர்.இதனால், எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கிறது தேனி.

 இது ஒரு புறம் என்றால், இருக்கும் பரபரப்பிற்கு இணையாக சாலை விபத்துகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.அதனை சற்று குறைக்கும் நோக்கோடு தேனி மாவட்ட காவல்துறை புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.

துணிச்சலாகவும், அஜாக்கரதையாகவும் செயல்பட்டு மரணத்தை விளைவித்தால், அதற்கு இந்திய தண்டனைச்சட்டம் செக்ஷன் 304 ஏ ன் படி தண்டனை வழங்கப்படுகிறது.

 இதனை அறிவுறுத்தும் விதமாக, தேனி மாவட்டத்தின் விபத்துப்பகுதிகளை கணக்கிட்டு, அந்த பகுதிகளில் உள்ள சாலையில், மஞ்சள், வெள்ளை நிற பெயிண்ட் மூலம் விபத்துப்பகுதி என எழுதி, அதில் ஒருவ பொம்மை வரையப்பட்டு, 304 ஏ என எழுதப்படுகிறது.

 இது தொடர்பாக காவல் துறையினரிடம் கேட்ட போது, தேனி மாவட்டத்தில் அதிகம் விபத்து ஏற்படுத்தும் பகுதிகளில், பேரிகேட், வேகத்தடை, ஒளிரும் பட்டை என எல்லாவற்றையும் பயன்படுத்தி பார்த்தோம், அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்துபவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

 விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.

 அதனால் தான், விபத்துப் பகுதிகளில் இது போன்று எழுதுகிறோம். ஏதோ எழுதியுள்ளனர் என தங்கள் வேகத்தை அப்போதாவது குறைப்பார்கள் என எண்ணித் தான் இதனை செய்துள்ளோம். மேலும், அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தக்கூடாது.

 அது தண்டனைக்குறிய குற்றம் என அறிவுறுத்தவும் இதனை செய்திருக்கிறோம்.விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கிறோம் எனக் கூறுகின்றனர்.

Share via