தென்காசி, செங்கல்பட்டு என 2 மாவட்டங்கள்  உருவாக்கப்படும்

by Editor / 18-07-2019 04:59:38pm
தென்காசி, செங்கல்பட்டு என 2 மாவட்டங்கள்  உருவாக்கப்படும்

திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும் தோற்றுவிக்கப்படும்

தென்காசி, செங்கல்பட்டு என 2 மாவட்டங்கள்  உருவாக்கப்படும்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் 110-ன் கீழ் போக்குவரத்து, பால்வளம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலன் ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்து உரையாற்றினார். 

திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும் தோற்றுவிக்கப்படும் சட்டசபையில் 110 வது  விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  .  

தமிழகத்தின் 34ஆவது மாவட்டமாக தென்காசி உதயமாக உள்ளது. தென்காசி மாவட்டத்தின் கீழ் சிவகிரி, அம்பாசமுத்திரம், கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய வட்டாரங்கள் வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்து உள்ளது.

Share via