சூர்யாவின் 10 அதிரடி கேள்விகள்

by Editor / 19-07-2019 12:04:57am
சூர்யாவின் 10 அதிரடி கேள்விகள்

சூர்யாவின் 10 அதிரடி கேள்விகள்

சூர்யா எழுப்பிய 10 அதிரடி கேள்விகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

  1. 30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம் ?
  2. மூன்று வயது குழந்தையால் மூன்று மொழி படிக்க முடியுமா
  3. நாட்டில் 1848 பள்ளிகள் மூடப்படப்போகின்றதே இதற்கு பதில் என்ன ?
  4. கல்வியில் சிறந்த நாடுகளில் 8ம் வகுப்பு வரை எந்த தேர்வும் இல்லை என்கிற நிலையில் 3 , 5 , 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்பது எப்படி சிறந்த கல்வியாகும் ?
  5. நுழைவுத்தேர்வு , பொதுத் தேர்வு , தகுதித் தேர்வு , நீட் தேர்வு என்று மாணவர்கள் தொடர்ந்து தேர்வை எழுதிக் கொண்டிருந்தால் அவர்கள் வாழ்க்கையை படிப்பது எப்போது ?
  6. 1 , 80 , 000 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் ஒருவர் மட்டுமே பாஸ் என்றால் இதை எப்படி பார்ப்பது ? 
  7. 50 , 000 கல்லூரிகள் 12 ஆயிரமாக குறைக்கப்படுவதும் , கோச்சிங் சென்டர்கள் அதிகரிப்பதும்தான் புதிய கல்வி கொள்கையா ?
  8. சுமார் 80 லட்சம் ஆசிரியர்களை கொண்ட இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை ஒரேயொரு ஆசிரியர் அமைப்பும் , ஒரேயொரு மாணவர் அமைப்பும் சேர்ந்து தீர்மானிப்பது எந்த விதத்தில் நியாயம் ?
  9. விதவிதமான கல்வி முறைகளை வைத்துக் கொண்டு தேர்வு மட்டும் பொதுவானது என்பது எப்படி சரியாகும் ?
  10. எதிர்கால தலைமுறையின் தலையெழுத்து எழுதப்படும் நேரத்தில் நாம் இன்னும் விழிப்படையாமல் இருக்கிறோமே ஏன் ?