மேம்பால அணுகுசாலை அமைக்க இடையூறு திருவானைக்காவலில் ஆக்ரமிப்புகள் அகற்றம்: போலீஸ் பாதுகாப்புடன் அதிரடி

by Admin / 13-11-2018
மேம்பால அணுகுசாலை அமைக்க இடையூறு திருவானைக்காவலில் ஆக்ரமிப்புகள் அகற்றம்: போலீஸ் பாதுகாப்புடன் அதிரடி

மண்ணச்சநல்லூர்: சத்திரத்தில் இருந்து ரங்கம் செல்லும் வழியில் உள்ள திருவானைக்காவலில் உள்ள ரயில்வே மேம்பாலம் மிகவும் குறுகியதாக இருந்ததால் அந்த பாலத்தை விரிவுபடுத்தி பெரிய மேம்பாலமாக கட்டும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

மேம்பால அணுகுசாலை அமைக்க இடையூறு திருவானைக்காவலில் ஆக்ரமிப்புகள் அகற்றம்: போலீஸ் பாதுகாப்புடன் அதிரடி

இதற்காக அந்த வழியில் பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ரங்கம் பஸ்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 1 ஆண்டுக்கு முன்னரே பாலம் கட்டுமான பணி முடிந்துவிட்ட நிலையிலும், திருவானைக்காவல் வழியாக ரங்கம் காந்தி சாலைதிருப்பம் வரை பாலத்துடன் அணுகுசாலை அமைக்கப்படவில்லை. இந்த சாலை அமைக்க முடியாதபடி இருபுறமும் கடைகள், வீடுகள் ஆக்ரமித்து இருந்தன. இந்த ஆக்ரமிப்புகளை அகற்றும்படி நெடுஞ்சாலைத்துறை வேண்டுகோள் விடுத்த நிலையிலும் யாரும் ஆக்ரமிப்புகளை அகற்றவில்லை. இந்நிலையில் இன்று காலை திருவானைக்காவல் மற்றும் காந்தி ரோடு திருப்பம் ஆகிய பகுதிகள் உள்ள ஆக்ரமிப்புகள் பொக்லைன் மூலம் இடித்து தள்ளப்பட்டன. 7 பெரிய வீடுகள், சிறிய மற்றும் பெரிய கடைகள் உள்பட 25 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ரோட்டில் வந்து கண்ணீர் விட்டு கதறினர். அவகாசம் தரும்படி கேட்டனர். ஆனால் அதிகாரிகள் அவகாசம் தராமல் நடவடிக்கையில் இறங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையில் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.