ஹஜ் பயனிகளுக்கு இலவச சிம்கார்டு சவுதி இளவரசர் அறிவிப்பு

by Editor / 22-07-2019 02:09:16pm
ஹஜ் பயனிகளுக்கு இலவச சிம்கார்டு சவுதி இளவரசர் அறிவிப்பு

ஹஜ் பயணிகளுக்கு இன்டர்நெட் வசதியுடனான  சிம்களை இலசமாக வழங்கும்- சவுதி அரேபியா.

           சவுதி அரேபியாவுக்கு புனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற உலகெங்குமிருந்து வரும் பயணிகளுக்கு அவர்கள் தங்கள் உறவுகளோடு உறவாட, தங்களது ஹஜ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவென சவுதி அரேபியா இன்டர்நெட் வசதியுடனான 1 மில்லியன் சிம் கார்ட்களை இலவசமாக வழங்கி வருகிறது.

இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டு அவர்கள் 24 மணிநேரமும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு சவுதி அரேபியா ஜித்தா விமான நிலையத்தில் வைத்து ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் பயணிகளுக்கு வழங்கி வருகின்றனர்.

ஹஜ் கடமைக்காக பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தருவோருக்கு பல நலத்திட்டங்களை செய்து வரும் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் இத்திட்டத்தை அறிவித்துள்ளார்

Share via