லாட்டரி அதிபர் மார்டினின் ரூ.119.6 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

by Editor / 23-07-2019 12:59:33am
லாட்டரி அதிபர் மார்டினின் ரூ.119.6 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

 விசாரணையில் சாண்டியாகோ மார்ட்டின் மற்றும் அவரது   கூட்டாளிகள் 910.3 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத   லாபம் ஈட்டியுள்ளனர்.

 கோவை: 

லாட்டரி அதிபர் மார்டினின் ரூ.119.6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குனரகம் முடக்கியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 61 வீடுகள், 81 வீட்டு மனைகள், கோவையில் கட்டிடங்களுடன் உள்ள 6 மனைகள் முடக்கப்பட்டு உள்ளன. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கை அடுத்து மார்ட்டின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

விசாரணையில் மார்ட்டினும் மற்றவர்களும் "சிக்கிம் அரசாங்கத்தை ஏமாற்றுவதன் மூலம் தவறான லாபங்களைப் பெறுவதற்காக லாட்டரி ஒழுங்குமுறைச் சட்டம், 1998 இன் விதிகளை மீறுவதற்கான ஒரு குற்றச் சதித்திட்டத்தை மேற்கொண்டனர்" என்று கூறப்படுகிறது.

Share via