குற்றாலம், ஐந்தருவிகளில் நீண்ட வரிசை: நீண்டநேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள்சுற்றுலா பயணிகள்

by Editor / 29-07-2019 12:38:31am
குற்றாலம், ஐந்தருவிகளில் நீண்ட வரிசை: நீண்டநேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள்சுற்றுலா பயணிகள்

   மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையும் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக குற்றாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் சில நாட்களுக்கு கொட்டியது. தற்போது தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் நீர் வரத்து குறைந்து போனது. ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் குற்றாலம் மெயினருவியில் திரண்ட சுற்றுலாப்பயணிகள் கூட்டம் நீண்ட வரிசையில் காணப்பட்டது.அது மட்டுமில்லாமல் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக மிகவும் அதிகமாக காணப்பட்டது.சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்யவில்லை ஆனால் குளிர்ந்த காற்று மட்டும் வெகுவாக வீசியது.குற்றாலம் மற்றும் ஐந்தருவிகளில் நீண்ட வரிசையில் நீண்ட நேரம்   நின்று குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

Share via