குற்றாலம் சிற்றருவியில் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்

by Editor / 29-07-2019 01:07:27am
குற்றாலம் சிற்றருவியில்  கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்

   சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் குற்றாலம் சிற்றருவியில் 26.07.19 மதியம் முதல் சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக திறக்கப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருந்தது.

குற்றாலம் சிற்றருவியில் குளித்துக் கொண்டிருந்த அருப்புக்கோட்டையை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி காளீஸ்வரி வயது 19 கர்ப்பிணி பெண் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Share via