நடிகர் தனுஷின் பட்டாசு: ஃபர்ஸ்ட் லுக்(First look)

by Editor / 28-07-2019 02:09:58am
நடிகர் தனுஷின்  பட்டாசு: ஃபர்ஸ்ட் லுக்(First look)

நடிகர் தனுஷின்  பட்டாசு: ஃபர்ஸ்ட் லுக்(First look)

   நடிகர் தனுஷின் பிறந்த நாளான நேற்று அவர் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் அவரது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் தனுஷ் மிகவும் இளமையாகவும் அழகாகவும் தோற்றமளிக்கிறார் இந்தபடத்தின் பெயர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு பட்டாசு என்ற தலைப்பை படக்குழுவினர் வெளியிட்டனர்.இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கி வெற்றி அடைந்திருக்கிறார்.தனுஷ் ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.