இன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினம்: கூகுள் நிறுவனம் கவுரவம்

by Editor / 30-07-2019 01:16:58pm
இன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினம்: கூகுள் நிறுவனம் கவுரவம்

 இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்.           தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்,தன்னார்வலர் . முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு 1956 இல் பத்ம பூஷண் விருது கொடுத்து கௌரவித்தது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு அவருக்கு கவுரவம் அளித்துள்ளது. முன்னதாக முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த தினமான ஜூலை 30-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவமனை தினம் கொண்டாடப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share via