சூட்கேஸ் நிறைய மனுக்களோடு வந்து பரபரப்பை ஏற்படுத்திய விவசாயி

by Admin / 13-11-2018
சூட்கேஸ் நிறைய மனுக்களோடு வந்து பரபரப்பை ஏற்படுத்திய விவசாயி

நெல்லை: நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் அருகே குலசேகரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (42).

சூட்கேஸ் நிறைய மனுக்களோடு வந்து பரபரப்பை ஏற்படுத்திய விவசாயி

விவசாயி. இவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு ‘சூட்கேஸ்’ நிறைய மனுக்களோடு வந்தார். போலீசார் அவரை வழிமறித்து சூட்கேசை வெளியே வைத்து விட்டு செல்லுமாறு வலியுறுத்தினர். இதையடுத்து அவர் சூட்கேசை மட்டும் அங்கு வைத்து விட்டு மனுக்களின் நகல்களோடு சென்றார். அவர் மனுவில் கூறியிருப்பதாவது: குலசேகரப்பட்டி கிராமத்தில் குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி மற்றும் கழிவு நீரோடை உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. இதுகுறித்து மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், கீழப்பாவூர் பிடிஓ, கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் 4 ஆண்டுகளாக மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. நான் அளித்த மனுக்களின் எண்ணிக்கை நூறை தாண்டி விட்டது. எனவே அந்த மனுக்களின் நகல்களை சூட்கேஸில் அடைத்து கலெக்டரின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.